The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது மங்கள வார்த்தை அறிவிப்பு என்பது லூக்கா நற்செய்தி 1:26-3இல் உள்ள படி கபிரியேல் தேவதூதர், கன்னி மரியாவுக்கு தோன்றி, அவர் தூய ஆவியினால் கருவுற்று ஒரு மகனைப் பெற்று இயேசுவின் தாயாவார் என்பதை அறிவித்த நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போதே மரியாவிடம் கபிரியேல் தூதர் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, இயேசு என பெயரிடச்சொன்னார். மேலும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் மரியாவிடம் எடுத்தியம்பினார்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை (பலவகை) எண். 1609, பொதுத் (செய்தி, மக்கள் தொடர்பு - விளம்பரம் -2) துறை, நாள்: 28-08-1978 மூலம் 1978 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.
தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது இயேசு கிறிஸ்து, மீண்டும் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்குத் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படும் நம்பிக்கையைக் குறிக்கும். இது மனிதர் எதிர்பாரா காலத்தில் நடக்கும் என நம்பப்படுவதால் இதனை இரகசிய வருகை என்றும் அழைப்பர். இந்த நிகழ்வினைப் பற்றிய முன் அறிவிப்பு நற்செய்தி நூல்களில் உள்ளது.
12ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது, விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரைஆகிய நகரங்களை தலைநகராக் கொன்டு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.
சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் (Swadeshi Steam Navigation Company (SSNC) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்திய விடுதலை இயக்கத்தின் போது, பிரித்தானியர் அல்லாத இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் கப்பல் நிறுவனம் ஆகும். கப்பல் போக்குவரத்தில் பிரித்தானியர்களின் ஏகபோக உரிமையை மறுத்து, இந்தியர்களால் மட்டுமே நடத்தப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வ. உ.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
உத்தர காண்டம் (Uttara Kanda) வால்மீகி எழுதிய இராமாயணம், யுத்த காண்டத்துடன் நிறைவுகிறது. பின்னர் அயோத்தியில் நடந்த இராமர்-சீதை, லவன்-குசன் ஆகியவர்களின் வரலாற்றுச் செய்திகளை உத்தர காண்டம் கூறுகிறது. இக்கண்டத்தில் வதந்தியான பொய்ச் செய்தியை கண்டு வருத்தமுற்று, கர்ப்பிணியான சீதையை, இராமர் காட்டிற்கு அனுப்புவதும், காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகத் தங்குவதும், ஆசிரமத்தில் சீதை லவன்-குசன் எனும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதும், வால்மீகி முனிவர் லவ-குசர்களுக்கு, போர்க்கலையையும், மேலும் தான் இயற்றிய இராமாயணத்தையும் இலவ-குசர்களுக்கு கற்பித்தலும் கூறப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே அல்லது புதுவையின் தமிழ்த் தாய் வாழ்த்து (அன்னை தமிழை பிரார்த்திப்பது) என்பது புதுச்சேரியின் மாநிலப் பாடல் ஆகும். இந்த பாடலை பிரபல கவிஞர் பாரதிதாசன் எழுதியிருந்தார். இவர் எழுதிய இசை அமுது என்னும் பாடல் தொகுப்பிலுள்ள இரண்டாம் பகுதியின் முதல் பாடல் இதுவாகும்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்
இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்: இந்தியாவில் சில விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றில் சில பட்டியலில் உள்ளன.
தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்
ஓரெழுத்தொருமொழி என்றால் 'ஒற்றை எழுத்துச் சொற்கள்' என்று பொருள். அதாவது ஒற்றை எழுத்தாக நின்று பிற பொருளைச் சுட்டும் சொற்கள். எடுத்துக்காட்டாகத் 'தீ' என்பது வெறும் எழுத்தாக மட்டுமில்லாமல் 'நெருப்பு' என்னும் பொருளைத் தரும் சொல்லாகவும் பயன்படுகிறது.
சதுப்புநில மான் (barasingha) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வடக்கு, மத்திய இந்தியாவிலும், நேபாளம், வங்கதேசம், பாக்கித்தான் போன்ற இடங்களிலும் காணப்படுகின்ற மான் ஆகும். இவை இந்தியாவில் உத்தரப்பிரதேசம், அசாம், மத்தியப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகள் அல்லது வறண்ட புல்வெளிகள் நிறைந்த பகுதியில் காணப்படுகின்றன. இம்மான் மத்தியப் பிரதேசத்தின் மாநில விலங்காகும்.
அமைதிப் பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் (Pacific Ocean) உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகும். இதற்கு போர்த்துகேய நிலந்தேடு ஆய்வாளரான பெர்டினென்ட் மகலன் என்பவரால் "அமைதியான கடல்" என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டது.16.52 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பெருங்கடல் உலகப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டுள்ளது. இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட மிகப் பெரியதாகும்.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது ஆகும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (பொட்டிச்செல்லி)
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (The Annunciation) என்பது சாண்ட்ரோ பொட்டிச்செல்லி என்னும் இத்தாலிய ஓவியரால் 1489-1490 ஆண்டுகளில் வரையப்பட்ட பசைக்கலவை ஓவியம் ஆகும். இது 1978இல் பழுதுபார்க்கப்பட்டு, தற்போது இத்தாலியின் புளோரன்சு நகரத்தில் உஃப்ஃபீசி (Uffici) கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொட்டிச்செல்லி (சுமார் 1445-1510) கிறித்தவ சமயம் சார்ந்த பல ஓவியங்களையும் பிற பொருள்கள் பற்றிய ஓவியங்களையும் வரைந்து புகழ்பெற்றுள்ளார் இதன் சிறப்புக் கூறுகள்: ஓவியத்தில் சித்தரிக்கப்படும் தளம் விரிந்துசெல்லும் கோணத்தில் அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியத்தில் கோவை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. அகப்பொருள் பாடல்கள் தொகை நூல்களில் மிகுதியாக இடம் பெற்று விளங்கியபோதும், துறைகள் எல்லாம் தேர்ந்து, நூல் ஒன்று புனைய வேண்டும் என்ற அவாவே "கோவை" இலக்கியம் தோன்றக் காரணம் எனலாம். ஐந்திணை நெறி வழுவாது அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம்.
தன்வினை / பிறவினை வாக்கியங்கள்
தன்வினை / பிறவினை வாக்கியங்கள் என்பன முறையே செய் வினை, செய்ப்பாட்டு வினையமைந்த வாக்கியங்களைக் குறிக்கின்றன.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
விசயநகரப் பேரரசின் நாணயங்கள் விசயநகரப் பேரரசு 1336 முதல் 1646 வரை தென்னிந்தியாவில் ஆண்டுவந்த பேரரசாகும். இவர்களது நாணய முறை மிகவும் சிக்கலானதாக இருந்தாலும் பேரரசு மறைந்த பிறகும் இவை புழக்கத்தில் இருந்தன. விசயநகரப் பேரரசு பதிப்பித்த நாணயத்தின் அடிப்படை அலகாக தங்க பகோடா அல்லது வராகம் பொறித்த 3.4 கிராம் நாணயம் இருந்தது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
பிரேம் கங்கை அமரன் அல்லது பிரேம்ஜி அமரன் (பிறப்பு: பிப்ரவரி 25, 1979), என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் பாத்திரங்களில் நடித்துவருகிறார்.அவரது மேடைப் பெயர், பிரேம்ஜி உண்மையில் ஒரு எழுத்துப் பிழையாகும், ஏனெனில் இது "பிரேம் ஜி.", (ஜி தனது தந்தையின் பெயரைக் குறிக்கிறது).
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (school) என்பது ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு, போதுமான கற்றல் இடம், கற்பித்தல் சூழலுடன் கூடிய கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடங்களைக் குறிப்பதாகும். பெரும்பான்மையான நாடுகளில் முறையான கல்வி முறைகள் உள்ளன, இது சில இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாரின் கல்விக் கூடங்களின் மூலம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
உடுமலை நாராயணகவி (Udumalai Narayana Kavi, 25 செப்டம்பர் 1899 – 23 மே 1981) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக் கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று பின்னர் இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் எனவும் மொழி ஆய்வாளர்கள் பிற்காலத்தில் வகைப்படுத்தினர். குறைந்த அடிகளுடைய நூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டன. மேற்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும், கீழ்க்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார்.
திரௌபதி முர்மு (Droupadi Murmu) (பிறப்பு 20 சூன் 1958) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய ஜனாதிபதியும் ஆவார். இவர் மே 2015 முதல் ஜார்க்கண்டின் 12 சூலை 2021 வரை இம்மாநிலத்தின் எட்டாவது ஆளுநராக இருந்தவர் ஆவார். சார்க்கண்டு மாநிலம் 2000ஆம் ஆண்டு உருவானதிலிருந்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் இவர் ஆவார்.
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் (Subrahmanyam Jaishankar, 9 சனவரி 1955) இவர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். இறுதியாக இந்தியாவின் வெளியுறவுச் செயலராக பணியாற்றியவர். இந்திய வெளியுறவுப் பணிச்சேவை பேராளரான செயசங்கர் முன்னதாக செக் குடியரசிலும் (2001–04) சீனாவிலும் (2009–13) ஐக்கிய அமெரிக்காவிலும் (2014–15) இந்தியத் தூதராகவும் சிங்கப்பூரில் (2007–09) இந்திய உயர் ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்.
2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் 18-ஆவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தியாவில் 2024 ஏப்ரல் 19 முதல் 2024 சூன் 1 வரை நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் 2024 சூன் 4 அன்று அறிவிக்கப்பட்டது. 1.4 பில்லியன் மக்கள் தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர், இது மொத்த மக்கள் தொகையில் 70% க்கு சமம்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
புனித யோவான் அல்லது புனித அருளப்பர் (ஆங்கிலம்: Saint John) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர்; இவர் இயேசுவின் அன்பு சீடர் ஆவார். கிறிஸ்தியல் கொள்கைகளைக் கொண்ட யோவான் நற்செய்தியை இவர்தான் எழுதினார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இவர் கிறிஸ்தவ திருச்சபையின் தொடக்க காலத்தில் இருந்தே புனிதராக போற்றப்படுகிறார்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
அரப்பா (Harappa) என்பது இந்தியத் துணை கண்டத்தின் மிகப்பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் ஒன்று ஆகும். இத்தொல்லியல் தளம் இன்றைய பாக்கித்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தின் சகிவால் நகரத்திற்கு மேற்கில் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. அரப்பா என்ற இத்தளத்தின் பெயர் ராவி நதிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள நவீன கிராமத்தின் பெயரிலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.