The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
இராஜேஷ் (Rajesh, 20 திசம்பர் 1949 - 29 மே 2025) தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இந்திய நடிகராவார். திரைப்படங்களில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ள இவர், 150-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களிலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
சிங்கப்பூர் (Singapore) அல்லது சிங்கப்பூர் குடியரசு (Republic of Singapore; சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும், நகர அரசும் ஆகும். இதன் நிலப்பரப்பு ஒரு முதன்மைத் தீவு, 63 தீவுகள் அல்லது திட்டுக்கள், ஒரு வெளிப்புறத் திட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. சிங்கப்பூர் நிலநடுக் கோட்டுக்கு வடக்கே ஏறத்தாழ ஒரு அகலக்கோட்டுப்பாகையில் (137 கிலோமீட்டர்கள் அல்லது 85 மைல்கள்) அமைந்துள்ளது.
உரோமைப் பேரரசு (ஆங்கிலம்: Roman Empire) என்பது பண்டைய உரோமின் குடியரசு காலத்துக்குப் பிந்தைய காலத்தைக் குறிக்கும் சொல் ஆகும். ஓர் அரசியல் அமைப்பாக ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் மேற்கு ஆசியாவின் நடு நிலக் கடலைச் சுற்றி இருந்த பகுதிகளில் பரந்த நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது. இதைப் பேரரசர்கள் ஆண்டனர்.
கேரளம் (ஆங்கிலம்: Kerala) இந்தியாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். 1956-ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் முறையைப் பின்பற்றி 1956 நவம்பர் 1 அன்று இது உருவாக்கப்பட்டது. கொச்சி, மலபார், தென் கன்னட மாவட்டம் மற்றும் திருவாங்கூரின் அப்போதைய பகுதிகளின் மலையாளம் பேசிய பகுதிகளை இணைத்து இது உருவாக்கப்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America/USA/US) அல்லது அமெரிக்கா (America) என்பது முதன்மையாக வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும் மற்றும் ஒன்பது சிறிய வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட 326 பகுதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது.
கௌதம புத்தர் (Gautama Buddha) என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகப் போர் 1 அல்லது முதலாம் உலகப் போர் (28 சூலை 1914 - 11 நவம்பர் 1918) என்பது வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போர்களில் ஒன்றாகும். பெரும்பாலான ஐரோப்பா, உருசியப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை இதில் கலந்து கொண்டன. ஐரோப்பா முழுவதும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, பசிபிக் மற்றும் ஆசியாவின் பகுதிகளில் சண்டைகள் நடைபெற்றன.
உடல் அமைப்பில் நவீன மனிதர்களானவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்கு 73,000 மற்றும் 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் வருகை புரிந்தனர். தெற்காசியாவில் தொடக்க காலத்தில் அறியப்பட்ட மனித எச்சங்களானவை 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகின்றன. தெற்காசியாவில் நிலையான வாழ்க்கையை வாழும் முறையானது பொ.
வேடன் என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ராப்பிசைப் பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். 2020 ஆம் ஆண்டில் இவர் "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்" என்ற தனது முதல் இசைக் காணொளி மூலம் முக்கியத்துவம் பெற்றார். இது ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான வருணனைக்காக பரவலாக கவனம் பெற்றது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளார்கள்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) - மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவியலின் பரந்த கிளையாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இலங்கை (Sri Lanka), வரலாற்றுரீதியாக சிலோன் (Ceylon), அதிகாரபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கே, மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு தென்மேற்கில் மாலைத்தீவுகளுடனும், வடமேற்கே இந்தியாவுடனும் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: 9 அக்டோபர் 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்தலைவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் (ஆங்கிலம்: Agriculture) என்பது உணவு மற்றும் உணவு சாராப் பொருட்களுக்காக பயிர் மற்றும் கால்நடை உற்பத்தி, நீர் வேளாண்மை, மீன் வளர்ப்பு மற்றும் காட்டியல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். நிலையான இடத்தில் வாழ்ந்த மனித நாகரிகத்தின் எழுச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக வேளாண்மை இருந்துள்ளது.
புலி (பாந்தெரா டைக்ரிஸ்; Panthera tigris ) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள ஒரு இனமாகும். பூனைகுடும்பத்திலேயே உருவத்தில் மிகப்பெரிய விலங்கான இது, இதன் பூனைகுடும்பத்தில் உருவத்தில் மிகப்பெரிய விலங்கான இது செம்மஞ்சள் நிற மேற்தோலுடன் கருப்புக் நிற கோடுகளுடன் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் போன்ற தாவர உண்ணிகளை வேட்டையாடுகின்றன.
மும்பை கோயம்புத்தூர் (Coimbatore, சுருக்கமாக கோவை) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
இந்திய-ஆரியப் புலப்பெயர்வு என்பது இந்தியத் துணைக் கண்டத்துக்குள் இந்திய-ஆரிய மொழிகளைப் பேசிய ஓர் இனமொழிக் குழுவான இந்திய-ஆரியர் இடம் பெயர்ந்ததைக் குறிப்பதாகும். இம்மொழிகளே தற்போதைய வங்காளதேசம், மாலைத்தீவுகள், நேபாளம், வட இந்தியா, கிழக்கு பாக்கித்தான் மற்றும் இலங்கையின் முதன்மையான மொழிகளாக உள்ளன. நடு ஆசியாவிலிருந்து இப்பகுதிக்குள் இந்திய-ஆரிய இடம் பெயர்வானது பொ.
புற்றுநோய் (cancer) என்பதுக் கேடுதரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பலவிதமான நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும். இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும். இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன வகையான புற்று நோய் என்று பெயரிடப்படுகின்றது.
விட்டலர், விதோபர், அல்லது பாண்டுரங்கன், இந்து சமயத்தினரின் வைணவ சமயக் கடவுளான கிருஷ்ணர் ஆவார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில், பந்தர்ப்பூர் எனும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் புகழ்பெற்ற பண்டரிபுரம் விட்டலர் கோயிலிலின் மூலவர் பகவான் விட்டலர் ஆவார். மராத்திய மொழியில் விட்டலர் என்பதற்கு செங்கல் என்று பொருள்.
பேரரசர் அக்பர் (Akbar the Great, Persian: اکبر اعظم, பாரசீக உச்சரிப்பு: அக்பர்-இ-ஆசம், பொருள்: மகா அக்பர்) என அழைக்கப்படும் அபூல் பாத் சலாலுத்தீன் முகம்மது அக்பர் (Abu'l-Fath Jalal-ud-din Muhammad Akbar, 25 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605), என்பவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 வரை ஆட்சி புரிந்தார். இவர் தன் தந்தை உமாயூனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார்.
கன்னடம் (ಕನ್ನಡ , க1ந்நட3, Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும். பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே.
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பெரும் கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் ஒரிரு தொகுதியில் தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனிபெரும்பான்மையோடு தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் (Anti-Hindi imposition agitation) என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும். 1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல் முறையாக வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
கார்கில் போர் (ஆங்கிலம்: Kargil War) அல்லது கார்கில் பிரச்சனை, 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.
அஜித் குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) என்பவர் ஒரு தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும் அழைக்கிறார்கள்.
பிரேசில் (Brazil; Portuguese: Brasil; பிரேசிலிய போர்த்துக்கீசம்: [bɾaˈziw] ( கேட்க)) அல்லது பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு (Federative Republic of Brazil, Portuguese: República Federativa do Brasil, ), தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதைத் தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன. வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக் குறிப்பிட்ட சாதனங்கள், சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம், மதராசு பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று.
உருமேனியா, ரொமானியா அல்லது ரொமேனியா (România, ()) என்பது ஐரோப்பாவின் நடு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளின் குறுக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக, தெற்கே பல்காரியா, வடக்கே உக்ரைன், மேற்கே அங்கேரி, தென்மேற்கே செர்பியா, கிழக்கே மல்தோவா ஆகிய நாடுகளும் தென்கிழக்கே கருங்கடலும் அமைந்துள்ளன. இது முக்கியமாக மிதவெப்ப-கண்டக் காலநிலையையும், 238,397 சதுர கி.மீ.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
நடராஜர் அல்லது நடராசர் (Nataraja) என்பவர் சைவர்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், அவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றம் ஆவார். இவரது திருக்கோலம் கூத்தன் என்றும் அழைக்கப்படுகிறது. நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது.
விசயநகரப் பேரரசு (ஆங்கிலம்: Vijayanagara empire, (; கருநடா இராச்சியம் என்றும் இது அழைக்கப்படுகிறது) என்பது பெரும்பாலான தென்னிந்தியாவை ஆண்ட ஒரு பிந்தைய நடுக்கால இந்துப் பேரரசு ஆகும். சந்திர குலத்தின் யது பிரிவைச் சேர்ந்த முதலாம் அரிஅரர் மற்றும் முதலாம் புக்கா ராயன் ஆகிய சங்கம மரபின் சகோதரர்களால் இப்பேரரசானது 1336ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 13ஆம் நூற்றாண்டின் முசுலிம் படையெடுப்புகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக தெற்கத்திய சக்திகளால் நடத்தப்பட்ட முயற்சிகளின் ஓர் உச்ச நிலையாக இப்பேரரசு அதன் முதன்மை நிலைக்கு வளர்ச்சியடைந்தது.
அங்கன்வாடி (Anganwadi) என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் (ICDS) கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டன.
இளவரசன்-திவ்யா கலப்புத் திருமண சர்ச்சை
இளவரசன்-திவ்யா திருமணச் சிக்கல் என்பது தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசனும் செல்லன் கொட்டாயில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்துத் திருமணம் செய்ததை அடுத்து உருவான சிக்கல்களைக் குறிக்கும். திவ்யாவின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இத்திருமணம் நடைபெற்றது. நவம்பர் 7ந் தேதி இரு வீட்டாரின் உறவினர்களும் தொப்பூரில் சந்தித்து பேசியபோது திவ்யா திவ்யாவின் அம்மாவுடன் செல்ல மறுத்து விடுகிறார்.
பெங்களூர் (Bangalore), அலுவல்முறையில் பெங்களூரு (Bengaluru, கன்னடம்: ಬೆಂಗಳೂರು, தமிழ்: வெங்களூர்) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்குப் பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் உள்ளது. இங்கு கன்னடம் பேசுவோர் (44%), தமிழ் பேசுவோர் (28%), தெலுங்கு பேசுவோர் (14%) என்பதாக உள்ளது.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
சுப்பிரமணியன் சுவாமி (ஆங்கிலம்: Subramanian Swamy, பிறப்பு: செப்டம்பர் 15, 1939) ஓர் இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணரும் ஆவார். அவர் ஏப்ரல் 26, 2016 அன்று முதல் மத்திய அரசின் மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார். அரசியலில் சேருவதற்கு முன்பு, டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணித பொருளாதாரம் பாடத்தின் பேராசிரியராக இருந்தார்.
தென்னிந்தியா (South India) அல்லது தென் இந்தியா என்பது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பில் 19.31% ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியான தக்காண பீடபூமியை உள்ளடக்கி, கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் அரபிக் கடல் மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று. அக்கட்சியின் தலைவர் மு.
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். இக்கலையை நாட்டிய சாஸ்திரம், பரத முனிவர் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்துதல் என்பவை எல்லாம் பரத நாட்டியத்தை சமசுகிருதமயமாக்க நடந்த ஏற்பாடுகள் என்ற கருத்து உள்ளது.
வாசிங்டன் சுந்தர்(Washington Sundar, பிறப்பு அக்டோபர் 5, 1999) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார் . தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6, 2016-ல் துவங்கினார்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.