The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
இராஜேஷ் (Rajesh, 20 திசம்பர் 1949 - 29 மே 2025) தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இந்திய நடிகராவார். திரைப்படங்களில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ள இவர், 150-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களிலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (அ) நெடுங்கால சுவாச அடைப்பு நோய் (chronic obstructive pulmonary disease; COPD; சிஓபிடி) என்பது ஒரு வகையான இடையூறு செய்கின்ற நுரையீரல் நோய் ஆகும். முக்கியமாக நாட்பட்ட மோசமான காற்றோட்டத்தை குறிக்கிறது சாதாரணமாக நாட்பட அது மேலும் மோசமாகிறது. இது, நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis) மற்றும் காற்றேற்ற விரிவு (emphysema) ஆகிய சுவாசப்பாதைகள் குறுக்கம் அடையும் நோய்களைக் குறிக்கிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
வேடன் என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ராப்பிசைப் பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். 2020 ஆம் ஆண்டில் இவர் "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்" என்ற தனது முதல் இசைக் காணொளி மூலம் முக்கியத்துவம் பெற்றார். இது ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான வருணனைக்காக பரவலாக கவனம் பெற்றது.
மாணவர் தலைவன் மற்றும் தலைவி (Head girl and head boy) என்பது பள்ளியின் முழு மாணவர் அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களைக் குறிக்கிறது. இந்தச் சொற்கள் பொதுவாகப் பிரித்தானிய கல்வி முறையிலும், பொதுநலவாய நாடுகளின் பள்ளிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சில பள்ளிகள் பள்ளித் தலைவர் அல்லது தலைமை மாணவர் போன்ற மாற்றுச் சொல்லாடல்களையும் பயன்படுத்துகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளார்கள்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
தூய்மை இந்தியா இயக்கம் (Clean India Mission, அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) என்பது 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் நாடு தழுவிய பிரச்சாரமாகும். இது 2009 இல் தொடங்கப்பட்ட நிர்மல் பாரத் அபியானின் மறுகட்டமைக்கப்பட்ட பதிப்பாகும், நிர்மல் பாரத் அபியான் திட்டமானது, அதன் நோக்கம் கொண்ட இலக்குகளை அடையத் தவறிவிட்டது. ஸ்வச் பாரத் இயக்கத்தின் முதல் கட்டம் அக்டோபர் 2019 வரை நீடித்தது.
செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் (Mangalyaan) என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 2013 நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக ஏவிய ஆளில்லாத விண்கலம் ஆகும். இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் வட்டணையில் வெற்றிகரமாக இணைந்தது. இதனால், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்குச் செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2018
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2018 என்ற இப்பக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களை அகர வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
சிவாசி ராவ் கெயிக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாசிராவ் காயகவாடு) என்பவர் இரசினிகாந்து (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
நுரையீரலில் உள்ள திசுக்களில் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சி ஏற்படுவதே நுரையீரல் புற்றுநோய் எனப்படுகிறது. இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் தவிர அருகில் இருக்கும் உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலில் பரவுவதற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான முதன்மையான நுரையீரல் புற்றுநோய்கள் தோல் மேல்புற உயிரணுக்களுடன் சேர்ந்து நுரையீரலின் தீவிரப் புற்றுநோயாக உண்டாகிறது.
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: 9 அக்டோபர் 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்தலைவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
2023 இசுரேல்-ஹமாஸ் போர் என்பது இசுரேலுக்கும் ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே அக்டோபர் 7 அன்றிலிருந்து நடைபெற்றுவரும் போரைக் குறிக்கும். மேற்குக் கரையிலும், இசுரேல்-லெபனான் எல்லையிலும் நடக்கும் மோதல்களும் இந்தப் போர் நடவடிக்கைகளில் அடங்கும். அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்கள் காசாக் கரையிலிருந்து இசுரேல் மீது தாக்குதல் நடத்தியது.
நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson's disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய் ஆகும், பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்திறன்கள், பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்கமாட்டாது. மூளையின் தொழிற்பாடுகளில் ஒன்றாகிய உடலியக்கங்களை ஒருங்கிணைத்தல் பாதிப்படைவதால் இந்நோய் ஏற்படுகின்றது. இந்நோயின் மிக இலகுவான அறிகுறியானது நடுக்கமாகும் (tremors).
இலங்கை (Sri Lanka), வரலாற்றுரீதியாக சிலோன் (Ceylon), அதிகாரபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கே, மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு தென்மேற்கில் மாலைத்தீவுகளுடனும், வடமேற்கே இந்தியாவுடனும் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.
விராட் கோலி (Virat Kohli, , பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். புது தில்லியில் பிறந்த இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2006 ஆம் ஆண்டில் விளையாடுவதற்கு முன்பாக தில்லி அணிக்காக விளையாடினார்.
புளூடூத் (Bluetooth) அல்லது நீலத்தொடர்பியல் அல்லது அண்புலனி என்பது குறுகிய தொலைவு கம்பியிலா தொழில்நுட்பத் தொடர்பியல் செந்தரமாகும். இது நிலைத்த கருவிக்கும் நகரும் கருவிவிக்கும் இடையில் குறுகிய தொலைவுக்குத் தரவைப் பரிமாறிக்கொள்ளவும் தனியர் பகுதிப் பிணையங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. கம்பியில்லா தனியர் பகுதிப் பிணையங்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தும் முறைமையில் , நீலத்தொடர்பியல் பரிமாற்றத் திறன் வரம்பு 2.5 மில்லிவாட்டுகள் ஆகும்.
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
ஈழை நோய் அல்லது ஈளை அல்லது மூச்சுத்தடை நோய் (Asthma, ஆஸ்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட (chronic) அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய (recurrent) மூச்சு எடுத்தலில்/விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கியக் காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால் காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட (reversible) சுருக்கம் மற்றும் இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசெளகரியமான நிலையை ஏற்படுத்தும்.
கன்னடம் (ಕನ್ನಡ , க1ந்நட3, Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும். பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே.
மிகப்பெரிய நகரங்களின் பட்டியல்
ஒரு நகரத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் அவை மிக முக்கியமான மூன்று வரையறைகளைப் பயன்படுத்துகிறது. எல்லா நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெறாது. நகரத்தின் சரியான வரையறையைப் பயன்படுத்தி மக்கள்தொகையின் அடிப்படையிலும் உள்ளூர் அரசாங்க நிர்வாக எல்லைகளின் கீழ் உள்ள பகுதி குறிப்பாக சீனாவின் சோங்கிங் பெருநகர வரையறையைப் பயன்படுத்தி மக்கள்தொகையின் அடிப்படையில் பெரிய நகரம் ஆகும்.
ரவிச்சந்திரன் அசுவின் ('Ravichandran Ashwin, , பிறப்பு: 17 செப்டம்பர் 1986) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அசுவின், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை யை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் இதர உள்நாட்டு போட்டிகளில் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பெர்முடா முக்கோணம் (சாத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு தளர்வாக வரையறுக்கப்பட்டப் பகுதி, அங்கே நிறைய வானூர்திகளும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க கடற்படையின் படி, இம்முக்கோணம் இல்லை என்றும் பெயர் புவியியல் பெயர்கள் அமெரிக்க வாரியம் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர் களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுசரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வர் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம்.
பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (school) என்பது ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு, போதுமான கற்றல் இடம், கற்பித்தல் சூழலுடன் கூடிய கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடங்களைக் குறிப்பதாகும். பெரும்பான்மையான நாடுகளில் முறையான கல்வி முறைகள் உள்ளன, இது சில இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாரின் கல்விக் கூடங்களின் மூலம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
கோப்ரா, ஆர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், எஸ்.எஸ்.லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, கனிஹா, மிர்ணாளினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளிவரவிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம். இப்படத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் திரையுலகில் அறிமுகமாகிறார், இவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோரும் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகின்றனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், புவன் சீனிவாசன் படத்தொகுப்பு செய்ய, ஆஸ்க்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
விசயகாந்து (Vijayakanth, விஜயகாந்த்; இயற்பெயர்: விஜயராஜ், 25 ஆகத்து 1952 – 28 திசம்பர் 2023) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவர் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது நான்கு தசாப்த திரை வாழ்க்கையில் இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
பிரெஞ்சுப் புரட்சி (French Revolution, பிரெஞ்சு: Révolution française; 1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாகப் பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலப்பிரபுத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
ஜாகுவார் (ஆங்கிலம்: Jaguar) (பேந்தீரா ஒன்கா) என்பது அமெரிக்காக்களைக் தாயகமாகக் கொண்ட பெரும்பூனை இனமாகும். இது சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரும்பூனை இனமாக உள்ளது. இதன் தற்போதைய வாழ்விடமானது மத்திய அமெரிக்காவில் பெரும்பான்மையாக மெக்சிகோவிலிருந்து பராகுவேவிற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு அர்ஜென்டினா வரையிலும் உள்ளது.
உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.
கோமகன் இலியோ இடால்ஸ்டாய் (ஆங்கிலம்: Leo Tolstoy) எனப் பரவலாக அழைக்கப்படும் இலெவ் நிக்கோலயேவிச் இடால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy உருசியம்: Лев Николаевич Толстой, பஒஅ: [ˈlʲef nʲɪkɐˈla(j)ɪvʲɪtɕ tɐlˈstoj]( கேட்க); இலியெவ் நிக்கலாயெவிச் தல்ஸ்தோய்; 9 செப்டம்பர் [யூ.நா. 28 ஆகத்து] 1828 – 20 நவம்பர் [யூ.நா. 7 நவம்பர்] 1910) என்பவர் ஓர் உருசிய எழுத்தாளர் ஆவார்.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2025
இப்பட்டியல் 2025 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) - மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவியலின் பரந்த கிளையாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
"பாவலரேறு" பெருஞ்சித்திரனார் (10 மார்ச் 1933 – 11 சூன் 1995) தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தமிழ் அறிஞர், புலவர், இதழாளர் மற்றும் பெரியாரிய, பொதுவுடைமை, தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர் ஆவார். தன் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில் கொய்யாக்கனி (1956), கனிச்சாறு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றினார். "மொழிஞாயிறு" என அறியப்படும் ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து தென்மொழி இதழைத் தொடங்கி நடத்தினார்.
கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx) சுருக்கமாக கார்ல் மார்க்சு (5 மே 1818 – 14 மார்ச்சு 1883) செருமானிய மெய்யியலாளரும், பொருளாதார அறிஞரும், வரலாற்றாசிரியரும், சமூகவியலாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், பத்திரிகையாளரும், அரசியல் பொருளாதாரத் திறனாய்வாளரும், சோசலிசப் புரட்சியாளரும் ஆவார். 1848 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கை துண்டுப் பிரசுரம், நான்கு-பாகங்களில் மூலதனம் (1867–1883) ஆகியவை இவரது மிகவும் பிரபலமான தலைப்புகள் ஆகும். மார்க்சின் அரசியல் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் அடுத்தடுத்த அறிவார்ந்த, பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.