The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் (Anti-Hindi imposition agitation) என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும். 1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல் முறையாக வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick) சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.
நலன் குமரசாமி தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் குறும்படங்கள் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்த இவர் தோட்டா விலை என்ன?, ஒரு படம் எடுக்கணும், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க குறும்படங்களை இயக்கியுள்ளார். சூது கவ்வும் எனும் முழுநீளத் திரைப்படத்தின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றார்.
சுதா கொங்கரா (Sudha Kongara) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநராவார். திரைக்கதை ஆசிரியராகத் தமிழ்த் திரையுலகிலும், தெலுங்குத் திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் அமைத்த திரைக்கதை இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் ( Mitr, My Friend) அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதாக 49-ஆவது தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது..
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2025
இப்பட்டியல் 2025 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்ப் புத்தாண்டு (Tamil New year) தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் அடிப்படையில் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
மகர ஜோதி (Makara Jyothi) வானத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 14 ல் மாலை 6.30 மணி அளவில் மகர சங்கராந்தி எனக்கூறப்படும் நாளன்று தோன்றும் நட்சத்திரம். கேரளா மாநிலத்தில் சபரிமலைக்கு நேர் எதிரே கண்டமாலா மலை முகட்டில் இது தோன்றுவதாக ஆதாரமற்ற செய்தியாக சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரத்தைக் காண வழிபாட்டாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் 41 நாட்கள் நோன்பிருந்து சபரிமலை செல்கின்றனர்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
இந்திய ஆட்சிப் பணி (அ) இ.ஆ.ப, (ஐ.ஏ.எஸ்) (இந்தி: भारतीय प्रशासनिक सेवा, பாரதீய பிரசாசனிக் சேவா) அனைத்து இந்தியப் பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
ஸ்ரீலீலா (Sreeleela; பிறப்பு: சூன் 14, 2001) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை ஆவார். இவர் முக்கியமாக கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றுகிறார். இவர் 2019 இல் 'கிஸ்' என்கிற கன்னடமொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், சிறந்த பெண் நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் வென்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
கார்த்தி என்று அழைக்கப்படும் கார்த்திக் சிவகுமார் (25 மே 1977) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பருத்தி வீரன் (2007), ஆயிரத்தில் ஒருவன் (2010), மெட்ராஸ் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுக் காவியமான பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் "வந்தியத்தேவன்" கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ்ப் புலவர் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி சனவரி மாதம் 15ஆவது நாள் (நெட்டாண்டு எனில் சனவரி 16) திருவள்ளுவர் நாளாகும்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
பாரதிராஜா (Bharathiraja, பிறப்பு: சூலை 17, 1941), தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
போகி (Bhogi) தமிழ் நாட்காட்டியில் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள், இந்தியாவில் கொண்டாடுகின்ற பண்டிகை ஆகும். கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை சனவரி 13 ஆம் நாளிலும், சில ஆண்டுகளில் சனவரி 14 ஆம் நாளிலும் வரும். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)
ஒரு வீடு இரு வாசல் (Oru Veedu Iru Vasal) 1990 இல் வெளியான இந்திய தமிழ்த் தொகைத் திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யாமினி, வைஷ்ணவி, சூர்யா, கணேஷ், குமரேஷ் நடித்துள்ளனர்.
சங்கராந்தி என்பது இந்துக்களின் பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில், 12 இராசிகள் கொண்ட ராசிச் சக்கரத்தில் சூரியன் ஒரு இராசியிலிருந்து அடுத்த இராசிக்கு இடம் பெயர்வதை குறிக்கிறது. எனவே ஒரு ஆண்டு 12 சங்கராந்திகள் கொண்டுள்ளது. சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, துளுநாடு, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, மிதிலை பிரதேசம், பிகார் மற்றும் நேபாளம் பகுதிகளில் ஒவ்வொரு சங்கராந்தியும், ஒரு மாதத்தின் தொடக்கமாகக் குறிக்கப்படுகிறது.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை (Mullaiperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது, தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது..
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
கிறீன்லாந்து அல்லது கிரீன்லாந்து (Greenland) என்பது டென்மார்க் இராச்சியத்தின் ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகும். இது நிலப்பரப்பின் அடிப்படையில் இராச்சியத்தின் மூன்று தொகுதிப் பகுதிகளில் மிகப்பெரியது, மற்றவை டென்மார்க், பரோயே தீவுகள் என்பவை ஆகும். இது ஹான்ஸ் தீவில் கனடாவுடன் ஒரு சிறிய 1.2 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
ஓய்வூதியம் (pension) என்பது, அரசுத்துறையில் வயது முதிர்வு காலம்வரை நிறைவளிக்கத்தக்க வகையில் பணிபுரிந்து தங்கள் பணியை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓவ்வொரு மாதமும் அரசாங்கம் வழங்கும் தொகை ஆகும். அரச ஊழியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வுபெறும் காரணம், சட்டரீதியான விதிகளின் கீழ் ஓய்வுபெறுதல் மற்றும் அவருடைய மொத்த பணிக்காலம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பல்வேறு வகையான ஓய்வூதிய வகைகளை ஓய்வூதிய விதிகள் அளிக்கின்றன. இந்தியாவில் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், வயது மூப்பின் காரணமாக ஓய்வு/விருப்ப ஓய்வு/கட்டாய ஓய்வு/கொடிய நோயால் நிரந்தரமாக பணி செய்ய இயலாமை காரணமாக ஓய்வு பெறும்போது, அவர்களது பொருளாதார நலனை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அரசு மாதாமாதம் ஒருதொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது..
அறுபது ஆண்டுகள் (Samvatsara, ஆண்டு வட்டம் அல்லது சம்வத்சரம்) பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இதில் அறுபது ஆண்டுகளுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர்கள் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகவும் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர்
ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் ஏத்தாப்பூர் பகுதியின் புத்திரகவுண்டன்பாளையம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் 111 அடி ஆகும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே 2026 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மு. க.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். . இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
துரந்தர் (Dhurandhar) (மொழிபெயர்ப்பு|உறுதியானவர்) என்பது 2025ஆம் ஆண்டின் இறுதியில் இந்தி மொழியில் வெளியான திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர், திரைக்கதை, இணை தயாரிப்பாளர் ஆதித்தியா தார் ஆவார். இத்திரைப்படம் இந்திய உளவாளி பாகிஸ்தானில் நடத்தும் உளவு வேலைகளை மையமாகக் கொண்ட மயிர்க்கூச்செறியும் அதிரடித் திரைப்படம் ஆகும்.
கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் (Brihadisvara Temple, Gangaikonda Cholapuram) என்ற சிவன் கோயில், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.