The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.
பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
மிருணால் தாகூர் (ஆங்கிலம் :Mrunal Thakur) இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் இந்தி மற்றும் தெலுங்குத் திரைப் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். நவம்பர் 12, 2012 முதல் பிப்ரவரி 23, 2013 வரை இந்தித் தொலைக்காட்சி நாடகத் தொடரான முச்சே குச் கெகதி...யே காமோசியான், மற்றும் ஏப்ரல் 15, 2014 ஆம் ஆண்டு வெளிவந்த குங்கும் பாக்யா ஆகிய தொடர்களின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் (Anti-Hindi imposition agitation) என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும். 1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல் முறையாக வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2025
இப்பட்டியல் 2025 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ்ப் புலவர் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி சனவரி மாதம் 15ஆவது நாள் (நெட்டாண்டு எனில் சனவரி 16) திருவள்ளுவர் நாளாகும்.
சுதா கொங்கரா (Sudha Kongara) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநராவார். திரைக்கதை ஆசிரியராகத் தமிழ்த் திரையுலகிலும், தெலுங்குத் திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் அமைத்த திரைக்கதை இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் ( Mitr, My Friend) அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதாக 49-ஆவது தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது..
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம்.ராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மொழியில் வெளிவந்த நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா திரைப்படத்தின் மறு தயாரிப்பே இத்திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2026 பெருநகர மும்பை மாநகராட்சி தேர்தல்
2026 பெருநகர மும்பை மாநகராட்சித் தேர்தல் (2026 Brihanmumbai Municipal Corporation election), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத் தலைநகரான பெருநகர மும்பை மாநகராட்சியின் 227 வார்டு உறுப்பினர்களையும், நகர மேயரையும் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் நகர்புர உள்ளாட்சித் தேர்தல் ஆகும். இதற்கான தேர்தல் 15 சனவரி 2026 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 16 சனவரி 2026 அன்று நடைபெறுகிறது.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
நலன் குமரசாமி தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் குறும்படங்கள் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்த இவர் தோட்டா விலை என்ன?, ஒரு படம் எடுக்கணும், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க குறும்படங்களை இயக்கியுள்ளார். சூது கவ்வும் எனும் முழுநீளத் திரைப்படத்தின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றார்.
காந்தாரா: அத்தியாயம் 1 (Kantara: Chapter 1) என்பது என்பது 2025 ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழி காவிய கனவுருப்புனைவு அதிரடித் திரைப்படம். இது கதம்பர் வம்ச ஆட்சியின் போது நடந்த ஒரு கதையை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியிருக்கிறார். மேலும், 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படத்தின் முன்பகுதியான இந்தக் கதை, முதல் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரம்பரியம் மற்றும் மூதாதையர் மோதலின் தோற்றத்தை ஆழமாக ஆராய்கிறது.
தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick) சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குநர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
ஸ்ரீலீலா (Sreeleela; பிறப்பு: சூன் 14, 2001) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை ஆவார். இவர் முக்கியமாக கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றுகிறார். இவர் 2019 இல் 'கிஸ்' என்கிற கன்னடமொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், சிறந்த பெண் நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் வென்றார்.
அஸ்லெப்பியசின் தடி (Rod of Asclepius) (⚕) என்பது சோதிடத்துடனும், அஸ்லெப்பியஸ் என்ற கிரேக்க கடவுளுடனும், மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளுடனும் தொடர்புடைய பண்டைய கிரேக்கச் சின்னம் ஆகும். இந்தச் சின்னத்தில் ஒரு பாம்பானது தடியொன்றில் படர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும். குறித்த சின்னத்தின் பெயருக்கான துவக்கம், கிரேக்கப் பழங்கதைகளில் வரும் வைத்தியரும் அப்போலோவின் மகனுமான அஸ்லெப்பியஸ் என்பவரோடு அதிகளவில் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
உழவன் மகன் (Uzhavan Magan) 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் அரவிந்தராஜ், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், திரைக்கதை ஆசிரியர் ஆபாவாணன், இசையமைப்பாளர் மனோஜ் கியான், ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார், படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் ஆவர்.
காந்தார (Kantara) (மொழிபெயர்ப்பு: மாயக் காடு), கன்னட மொழியில் 2022 செப்டம்பர் 30 அன்று திரையிடப்பட்ட பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுத் திரையிடப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டி இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கி, நடித்துள்ளார். விஜய் கிரகந்தூர் படத்தைத் தயாரித்துள்ளார்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
இம்மானுவேல் சேகரன் (9 அக்டோபர் 1924 – 11 செப்டம்பர் 1957) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
ஓய்வூதியம் (pension) என்பது, அரசுத்துறையில் வயது முதிர்வு காலம்வரை நிறைவளிக்கத்தக்க வகையில் பணிபுரிந்து தங்கள் பணியை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓவ்வொரு மாதமும் அரசாங்கம் வழங்கும் தொகை ஆகும். அரச ஊழியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வுபெறும் காரணம், சட்டரீதியான விதிகளின் கீழ் ஓய்வுபெறுதல் மற்றும் அவருடைய மொத்த பணிக்காலம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பல்வேறு வகையான ஓய்வூதிய வகைகளை ஓய்வூதிய விதிகள் அளிக்கின்றன. இந்தியாவில் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், வயது மூப்பின் காரணமாக ஓய்வு/விருப்ப ஓய்வு/கட்டாய ஓய்வு/கொடிய நோயால் நிரந்தரமாக பணி செய்ய இயலாமை காரணமாக ஓய்வு பெறும்போது, அவர்களது பொருளாதார நலனை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அரசு மாதாமாதம் ஒருதொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது..
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர்
ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் ஏத்தாப்பூர் பகுதியின் புத்திரகவுண்டன்பாளையம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் 111 அடி ஆகும்.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
அண்ணாத்த (Annaatthe) (2021) என்பது ரஜினியின் 168 ஆவது தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிவா எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)
ஒரு வீடு இரு வாசல் (Oru Veedu Iru Vasal) 1990 இல் வெளியான இந்திய தமிழ்த் தொகைத் திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யாமினி, வைஷ்ணவி, சூர்யா, கணேஷ், குமரேஷ் நடித்துள்ளனர்.
துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) என்பவர் காட்பாடியார் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் சுருக்கமாக அழைக்கப்படும். இவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு என்னும் ஊரில் ஆண்டுதோறும் பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டு நடத்தப்படும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று ஆகும். இவ்வூரில் நடக்கும் இவ்விளையாட்டைக் காண பல ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்களும், வெளி நாட்டுப் பயணிகளும் ஆண்டுதோறும் வந்து கூடுவது வழக்கம். இவ்விளையாட்டை ஏறுதழுவல் என்றும் அழைப்பர்.
தமிழ்ப் புத்தாண்டு (Tamil New year) தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் அடிப்படையில் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு:(இது முழுமையான பட்டியல் அல்ல.)
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple) சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தை பாடியுள்ளனர்.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை (Mullaiperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது, தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது..