The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...
தேவா (Deva, 20 நவம்பர் 1950 - 17 அக்டோபர் 2026) என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம், பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். 400-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஜெய் (Jai, பிறப்பு: ஏப்ரல் 6, 1986) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன் ஆவார். ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், அவர் இசுலாம் மார்க்கத்தை ஏற்றதாகவும், ஏழு ஆண்டுகளாக அதை பின்பற்றி வருகிறார் என்றும், எதிர்காலத்தில் தனது பெயரை அஜீஷ் ஜெய் என்று மாற்ற நினைப்பதாகவும் கூறினார்.
உடலுறவு நிலைகள் (அல்லது புணர்ச்சி நிலை) என்பது மக்கள் உடலுறவிலோ பிற பாலியல் தொழிற்பாடுகளிலோ ஈடுபடும் போது தங்களின் உடல்களை அமைத்துக் கொள்ளும் தோரணை அல்லது உடலமைப்பைக் குறிக்கும். உடலுறவு என்பது பொதுவாக ஒருவரின் உடலுக்குள் மற்றொருவர் தம் உறுப்பை நுழைத்தலை உள்ளடக்கியதாக இருந்தாலும், உடலுறவு நிலைகள் பொதுவாக உறுப்பு நுழைப்பில்லாத பாலியல் செயல்பாடுகளையும் குறிக்கின்றன. நடைமுறையில் பாலியல் செயல்பாடுகள் பரவலாகப் பின்வரும் முதன்மைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன: பெண்குறி வழிப் புணர்ச்சி (பெண்ணின் பாலுறுப்பினுள் ஆண்குறி உட்புகுதல்) மலவாய் வழிப் புணர்ச்சி (மலவாயினுள் பாலுறுப்பு உட்புகுதல்) வாய் வழிப் புணர்ச்சி (வாய் மற்றும் உதடுகளால் பாலுறுப்புகளையோ மலவாயையோ தூண்டுதல்) கை வழிப் புணர்ச்சி (விரல்கள் அல்லது கைகளைப் பயன்படுத்திப் பாலுறுப்புகள் மற்றும் மலவாயைத் தூண்டுதல்) இவை தவிர, செயற்கை ஆண்குறி (அல்லது அதிர்வூட்டி) போன்ற பாலியல் உதவிக் கருவிகளைப் பயன்படுத்தும் செயல்பாடுகளும் இந்நிலைகளில் அடங்கும்.
மண்டாடி (Mandaadi / கடல் உலாவி) என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026
இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
வித்யா பாலன் (Vidya Balan, பிறப்பு: 1 சனவரி 1979) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் பெண்மையப் பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகில் பெண்களின் சித்தரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக அறியப்படுகிறார். இவர், தேசிய திரைப்பட விருதையும், ஏழு பிலிம்பேர் விருதுகளையும் உள்ளடக்கிய பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஆயுத பூஜை அல்லது சரசுவதி பூஜை என்பது நவராத்திரி விழாவின் அங்கமான ஓர் இந்து சமய பண்டிகையாகும். இது இந்து நாட்காட்டியின்படி புரட்டாசி மாதம் வளர்பிறை நவமியிலும் பொது நாட்காட்டியின்படி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டம் முழுக்கக் கொண்டாடினாலும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளால் கொண்டாடப்படுகிறது.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: ஞானதேசிகன் - 3 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 சனவரி 25 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜயதசமி (Vijayadashami, வங்காளம்: বিজয়াদশমী, கன்னடம்: ವಿಜಯದಶಮಿ, மலையாளம்: വിജയദശമി, மராத்தி: विजयादशमी, நேபாளி :विजया दशमी, ஒரியா :ବିଜୟାଦଶମୀ, தெலுங்கு: విజయదశమి) இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது. தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
அதிதி மேனன், அவரது மேடைப் பெயரான மிர்னா மேனன் மூலம் நன்கு அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்கிறார். அவர் 2016 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பட்டதாரி திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் சித்திக்கின் பிக் பிரதர் (2020) மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
சிவாஜி ராவ் கெயிக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜிராவ் காயகவாடு) என்பவர் இரசினிகாந்து (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) திரைப்படங்களில் நெல்சன் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார் . இவரது படங்கள் கருப்பு நகைச்சுவை மற்றும் ஒத்திசைக்கப்பட்ட நகைச்சுவை கதாபாத்திரங்களின் கூறுகளைக் கொண்டதாக அறியப்படுகின்றன.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
மிதுன் சக்ரவர்த்தி (பிறப்பு : கௌரங்க சக்ரவர்த்தி, 16- ஜூன் 1952) என்பவர் தேசிய திரைப்பட விருது வென்ற இந்திய திரைப்பட நடிகர், சமூக சேவகர் மற்றும் தொழில் முனைவர் ஆவார். சக்கரவர்த்தி அறிமுக நடிகராக மிருணாள் சென்னின் மிரிகயா (1976) படத்தில் நடிக்கத் துவங்கினார். அறிமுகப் படத்திலேயே இவர் சிறந்த நடிகருக்கான சிறந்த தேசிய விருதைப் பெற்றார்.
ஜெயிலர் (Jailer) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இதை இயக்குநர் நெல்சன் எழுதி இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உடன் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பாட்ஷா (Baashha) என்பது 1995 இல் சுரேஷ் கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கொள்ளையர்கள் பற்றிய அதிரடி தொடர்பான இத்திரைப்படத்தில் இரசினிகாந்து, நக்மா, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். சனகராஜ், தேவன், சசி குமார், விஜயகுமார், ஆனந்தராஜ், சரண்ராஜ், கிட்டி, சத்தியப்பிரியா, செண்பகா, யுவராணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.
எலான் மசுக் (Elon Reeve Musk, பிறப்பு: சூன் 28, 1971) தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்கத் தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், முதலீட்டாளர் ஆவார். இவர்ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரியாகவும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal) டெஸ்லா மோட்டார்ஸ், ஜிப்2 ஆகிய நிறுவனங்களின் ஆரம்பகால முதலீட்டாளர் ஆவார்.
முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம்
முத்தாரம்மன் கோவில் (Mutharamman Temple, Kulasekharapatnam) இந்திய நாட்டின் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தின் கடற்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும். இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
அண்ணாமலை (Annaamalai) 1992-இல் ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பால் வியாபாரம் செய்யும் ஒரு வெகுளியான மனிதன், நண்பனின் துரோகத்திற்கு பழிவாங்க பணக்காரன் ஆகிறான்" என்பது தான் அண்ணாமலை திரைப்படத்தின் ஒருவரிக் கதையாகும். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர்.
இந்திய ஆட்சிப் பணி (அ) இ.ஆ.ப, (ஐ.ஏ.எஸ்) (இந்தி: भारतीय प्रशासनिक सेवा, பாரதீய பிரசாசனிக் சேவா) அனைத்து இந்தியப் பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
கங்கை அமரன் (Gangai Amaran) தமிழ்த் திரைப்படங்களில் ஓர் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குநராகவும் பன்முகத் திறமை காட்டியவர். பல தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும், நடிகர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பிரீத்தி ஆகியோரின் தந்தையும் ஆவார்.
துர்கா அஷ்டமி அல்லது மகா அஷ்டமி ஐந்து நாட்கள் நீடித்த துர்கா பூஜா விழாவின் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். பாரம்பரியமாக, அனைத்து இந்திய வீடுகளிலும் திருவிழா 10 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது, ஆனால், 'பந்தல்களில்' நடக்கும் உண்மையான பூஜை 5 நாட்களில் (சாஷ்டியில் தொடங்கி) நடைபெறுகிறது. இந்தியாவில் இந்த புனித சந்தர்ப்பத்தில் உண்ணாவிரதம் பலரால் மேற்கொள்ளப்படுகிறது.
எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.
சூரஜ் வாசுதேவன் (Suraj Vasudevan) (பிறப்பு 30 சூன் 1976), தொழில் ரீதியாக சூரஜ் வெஞ்சரமூடு (Suraj Venjaramoodu) என்று புகழ் பெற்ற இவர், ஓர் இந்திய திரைப்பட நடிகரும், நகைச்சுவை நடிகரும், பொழுதுபோக்குக் கலைஞரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், மேடையில் தோன்றி வருகிறார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil), இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.
வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
சாக்கி செராப் (ஆங்கிலம்: Jackie Shroff) (இந்தி: जैकी श्रॉफ़) (பிறப்பு: 1957 பெப்ரவரி 1) ஓர் இந்திய நடிகர். குஜராத்திய மற்றும் இந்தி திரையுலகில் முப்பதாண்டுகளுக்கும் மேல் இருக்கிறார். 150 இற்கும் அதிகமான இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட, வங்காள, மராத்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.13 மொழிகளில் 220 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார்.
அருணாச்சலம் (Arunachalam) 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,சௌந்தர்யா,ரம்பா,மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். அருணாச்சலம் திரைப்படம் சிறந்த திரைப்படம் உட்பட மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தன்ராஜ் மாஸ்டர் அல்லது மாஸ்டர் தன்ராஜ் (Master Dhanraj (also credited as Dhanraj Master) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னையில் உள்ள மைலாப்பூரைச் சேர்ந்த இசை ஆசிரியர், இசைக் கலைஞர் மற்றும் பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் கொண்ட பன்முக இசைக் கலைஞர் ஆவார். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளுவதிலும், வாசிப்பதிலும் வல்லவர்.. 1948-இல் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படமான சந்திரலேகா திரைப்படத்தில், முரசு நடனக் காட்சியில், இவர் முதன் முதலில் மேற்கத்திய இசையை அறிமுகப்படுத்தினார்.
தேவா (Deva) என்பது 2025-ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழி அதிரடிப் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில், ராய் கபூர் பிலிம்ஸின் கீழ் சித்தார்த் ராய் கபூர் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சாகித் கபூர், பூஜா ஹெக்டே மற்றும் பாவைல் குலாட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.