The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...
2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்
2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் (2026-2031 Tamil Nadu Legislative Assembly By-Polls) என்பது 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவு மே 4 அன்று வெளியானதைத் தொடர்ந்து நிகழ்வது ஆகும். இத்தேர்தலில், ச. சோசப் விசய் தலைமையிலான த.வெ.க.
டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலதிக ஊடக சேவை அல்லது ஓடிடி தளம் (Over-the-top media service) என்பது இணைய வழி நேரடி நுகர்வோர் பார்வையாளருக்காக வழங்கப்படும் ஊடக ஓடை சேவையாகும். இது கம்பி வடத் தொலைக்காட்சி, புவிப்புறத் தொலைக்காட்சி, செய்மதித் தொலைக்காட்சி போன்றவற்றில் இருந்து வேறுபடுகின்றது. இந்த சேவையை பயன்படுத்தபடும் சந்தாதாரர்களிடமிருந்து மாதம் அல்லது வருட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புஷ்பவனம் குப்புசாமி (Pushpavanam Kuppusamy) என்றறியப்படும் குப்புசாமி தமிழ் நாட்டுப்புறப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். தன் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் என்னும் கிராமியப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவல்லவர். தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குகிறார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் (Singeetam Srinivasa Rao, 21 செப்டம்பர் 1931 – 3 அக்டோபர் 2026)) தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். சீனிவாசராவ் தெலுங்கு நியோகி பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியல் பட்டம் பெற்றார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப் பாரம்பரியமுடைய கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அரசு அமைப்பாகும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026
இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil), இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.
வா. சத்தியபாமா (பிறப்பு: 22 மார்ச், 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகத் திருப்பூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுருள்பாசி (Spirulina) அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியா என அழைக்கப்படும் நுண்ணுயிரி சயனோபாக்டீரியா (Cyanobacteria) மனிதர்களாலும், விலங்குகளாலும் உண்ணத்தக்கவையாகும். முதன்மையாக, இரண்டு சயனோபாக்டீரியா இனங்கள் (ஆர்த்ரோஸ்பைரா பிளாட்டென்சிஸ், ஆர்த்ரோஸ்பைரா மேக்சிமா) உணவுக் குறைநிரப்பிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் நீலப்பச்சைப்பாசி வளர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
சுந்தரமூர்த்தி நாயனார் அல்லது சுந்தரர் (Sundarar) என்பவர் சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார் எனப்படுகிறது. பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
மத்திய ஊதிய ஆணையம் (Central Pay Commission) என்பது இந்திய அரசினால் பத்தாண்டுக்கு ஒருமுறை அமைக்கப்படும் ஒரு குழுவாகும். இது குடிமை மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த மத்திய அரசு ஊழியர்களின் ஊதியக் கட்டமைப்பில் மாற்றங்கள் தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. 1946இல் நிறுவப்பட்ட, இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஏழு ஊதிய ஆணையங்கள், இந்திய அரசாங்கத்தை உள்ளடக்கிய அனைத்து குடிமை மற்றும் இராணுவப் பிரிவுகளின் பணி மற்றும் ஊதியக் கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
நிவின் பாலி (Nivin Pauly; மலையாளம்: നിവിൻ പോളി, பிறப்பு: அக்டோபர் 11, 1984) ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், சப்டேர்ஸ், நேரம், அருகில் ஒராள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.பிரேமம்(2015) மலையாளத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மலையாளத்தின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உருவாகி உள்ளார்.பெங்களுர் டேசு மற்றும் 1983 திரைப்படங்களுக்காக 2015 ஆண்டின் கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.
மருதநாயகம் பிள்ளை (Maruthanayagam Pillai) என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான்ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா கீழப்பனையூரில் பிறந்தார். ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர்.
எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.
கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு
கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.
கேதார்நாத் கோயில் (Kedarnath Temple) இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோயில் (Srirangam Ranganathaswamy Temple) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாத பெருமாள் கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
வித்யா ராம்ராஜ் (பிறப்பு 20 செப்டம்பர் 1998) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறார். 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4x400 கலப்புப் பிரிவில் வெள்ளியும் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman, 3 சனவரி 1760 - 16 அக்டோபர் 1799), தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
கொன்றால் பாவம் (Kondraal Paavam) என்பது 2023-ஆம் ஆண்டில் வெளியான இந்திய தமிழ் குற்றவியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். தயாள் பத்மநாபன் எழுதி இயக்கிய இப்படத்தை ஐன்ஃபாக் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் ஆகியோர் தயாரித்தனர். இதில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் இப்படம் 10 மார்ச் 2023 அன்று வெளியானது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்றத் தொகுதிகளையும்; பட்டியற் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் (Singapore) அல்லது சிங்கப்பூர் குடியரசு (Republic of Singapore; சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும், நகர அரசும் ஆகும். இதன் நிலப்பரப்பு ஒரு முதன்மைத் தீவு, 63 தீவுகள் அல்லது திட்டுக்கள், ஒரு வெளிப்புறத் திட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. சிங்கப்பூர் நிலநடுக் கோட்டுக்கு வடக்கே ஏறத்தாழ ஒரு அகலக்கோட்டுப்பாகையில் (137 கிலோமீட்டர்கள் அல்லது 85 மைல்கள்) அமைந்துள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும். இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.