The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (பிறப்பு: நவம்பர் 13, 1935) இந்தியாவின் முன்னணித் திரைப்படப் பின்னணிப் பாடகி. தென்னிந்தியாவின் "இசைக்குயில்" என்றும் "மெல்லிசை அரசி" என்றும் அழைக்கப்படும் பி.சுசீலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
விதியின் விளையாட்டு (1957 திரைப்படம்)
விதியின் விளையாட்டு 1957-ஆம் ஆண்டில் வெளிவரவேண்டிய திரைப்படம். ஆனால் திரைப்படம் வெளியிடப்படவில்லை. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் இராமமூர்த்தி - சத்தியவதி இணையருக்குப் பிறந்த எஸ்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தெலுங்கு கங்கைத் திட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழகத்திலுள்ள சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக தென்னிந்தியாவில் செயல்படுத்தப்பட்ட நதிநீர் வழங்கல் திட்டம் ஆகும். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் பெறப்படுவதால், இத்திட்டம் கிருஷ்ணா நதிநீர் வழங்கல் திட்டம் (அ) கிருஷ்ணா நதிநீர் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும் தண்ணீர், சென்னை நோக்கி திருப்பிவிடப்பட்டு, 406 கி.மீ.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
கட்டா குஸ்தி 2 என்பது 2026 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி, விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த செல்ல அய்யாவு அவர்கள் இயக்கிய திரைப்படமாகும். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஐ.வி.ஒயி.என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம், கட்டா குஸ்தி (2022) படத்தின் தொடர்ச்சியாக, விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா இலட்சுமி சிறந்த நடிப்பில் கருணாஸ், முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் காளி வெங்கட் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
கே. பாக்கியராஜ் (Bhagyaraj) என அழைக்கப்படும் கிருஷ்ணசுவாமி பாக்கியராஜ் (7 சனவரி 1953 – 27 சூன் 2026) இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகரும், இசையமைப்பாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியதோடு, பிற இந்திய மொழித் திரைப்படங்களையும் இயக்கி நடித்தார்.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது அனுபவங்களை உருவகப்படுத்தி, யோசனைகள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது சூழ்நிலையைப் பயன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தும் காட்சிக் கலைப் பணியாகும். இந்தப் படங்கள் பொதுவாக ஒலியுடனும் மிகவும் அரிதாக, பிற உணர்ச்சி தூண்டுதல்களுடன் இருக்கும். திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது.
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
எஸ். ஜானகி பதிவு செய்த தமிழ்ப் பாடல்களின் பட்டியல்
எஸ். ஜானகி பாடிய தமிழ்ப் பாடல்களின் பட்டியல் (List of Tamil songs recorded by S. Janaki) கீழ்க்கண்டவாறு: 'எஸ்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.
தமிழ்நாடு நாள் (Tamilnadu Day) என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது.
விஜயகுமார் (Vijayakumar, பிறப்பு: 29 ஆகத்து 1943) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு (குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில்) நடித்துள்ளார். ஒரு சில இந்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள் (Janaki Ammal Edavalath Kakkat) உயிர்க்கல மரபியலிலும் தொகுதிப் புவியியலிலும் ஆராய்ச்சி நடத்திய ஓர் இந்தியத் தாவரவியல் வல்லுநர். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க வேலை கரும்பு மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை சார்ந்தது. இவர் கேரள மழைக் காடுகளில் இருந்து தேவையான மூலிகை, பொருளாதார மதிப்புள்ள பல்வேறு தாவரங்களைத் திரட்டினார்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பாரதிராஜா (Bharathiraja, 17 சூலை 1941 – 10 சூன் 2026) தமிழ்த் திரைப்படங்களில் முதன்மையாகப் பணியாற்றிய இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும் நடிகருமாவார். 1977-ஆம் ஆண்டில் 'பதினாறு வயதினிலே' திரைப்படத்தில் அறிமுகமான இவர், கிராமத்து வாழ்க்கையைத் தனது படங்களில் மிகவும் உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்டியதற்காகப் புகழ்பெற்றவர். மக்கள் இவரை 'இயக்குநர் இமயம்' என்று அன்பாக அழைத்தனர்.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: 2 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தென்காசி (Tenkasi) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின், தென்காசி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்நகரம், 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் மதராசப்பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் மாதரசன்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
வியட்நாம் (Vietnam) அல்லது அதிகாரபூர்வமாக வியட்நாம் சமவுடைமைக் குடியரசு (Socialist Republic of Vietnam) என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். 2012ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 90.3 மில்லியன் மக்களைக் கொண்டு மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 13ம் இடத்திலும், ஆசியாவில் 8வது இடத்திலும் உள்ளது. வியட்நாம் என்பதன் கருத்து "தெற்கு வியட்" (நாம் வியட் எனும் பண்டைய சொல்லுக்கு ஒத்ததாக உள்ளது.) என்பதாகும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.
நா. மரிய வில்சன் (N. Marie Wilson) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு கீழ்புறத்தில் சிவனும் பார்வதியும் இலிங்கத்திற்கு பூஜை செய்யுமாறு மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அல்லது பழநி முருகன் கோவில் (Dhandayuthapani Swamy Temple) என்பது முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது. இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கி.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி, பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் என்பன அறியப்படுகின்றன. சைவ நாற்பதங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
லூக்கா மோத்ரிச் (Luka Modrić பிறப்பு 9 செப்டம்பர் 1985) குரோவாசிய தொழில்முறை கால்பந்து விளையாட்டாளர். எசுப்பானியக் கழகமான ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் மோத்ரிச் குரோவாசியா தேசிய அணியின் அணித்தலைவராவார். மோத்ரிச் முதன்மையாக நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)#நடுக்கள வீரர்; இருப்பினும் தாக்கும் நடுக்களத்தினராகவோ காப்பு நடுக்களத்தினராகவோ, அல்லது பின்னாலிருந்து ஆட்டத்தை நிர்ணயிப்பவராகவோ விளையாடுகின்றார்.
ஒரு ஆசிரியர், பள்ளி ஆசிரியர் (Teacher) அல்லது முறையாகக் கல்வியாளர் என்றும் அழைக்கப்படுபவர், கற்பித்தல் மூலம் மாணவர்களுக்கு அறிவு, திறன் அல்லது நல்லொழுக்கத்தைப் பெற உதவுபவர் ஆவார். முறைசாரா முறையில் ஆசிரியரின் பங்கு வேறு சிலராலும் ஏற்கப்படலாம் (எ.கா. ஒரு குறிப்பிட்ட பணியை எப்படிச் செய்வது என்பதை சக ஊழியருக்கு சொல்லிக் கொடுக்கும் போது).
சரத்குமார் (Sarathkumar, பிறப்பு : சூலை 14, 1954) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார் .முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ்த் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.