The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். வெங்கீ அட்லூரி எழுதி இயக்கிய இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்தன. இப்படத்தில் சூர்யா , மமிதா பைஜு ஆகியோருடன் ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, பவானி ஸ்ரீ , சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் (ஆங்கிலம்: Pillaiyarpatti Pillaiyar Temple) என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில், பிள்ளையார்பட்டி ஊரில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும்.
இம்மானுவேல் சேகரன் (Immanuel Sekaran, 9 அக்டோபர் 1924 – 11 செப்டம்பர் 1957) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய, ஒரு தமிழக அரசியல் தலைவரும், இராணுவ வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவரும் ஆவார். தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026
இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973
மிசா (MISA) என்று பரவலாக அறியப்பட்ட உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் (Maintainence of Internal Security Act) இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும். இந்தியச் சட்ட செயலாக்கப் பிரிவினருக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் விதமாக, அதன்மூலம் நிச்சயமற்ற குற்றக்காரணங்கள் ஏதுமின்றி எந்தவொரு தனிநபரையும் கைது செய்யமுடியும், அவரின் செயல்பாடுகளை முடக்க முடியும், அவரின் உடைமைகளை பிடிஆணை இல்லாமல் பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது. இச்சட்டம் மனித உரிமைகளை நசுக்குவதற்காகவும், அரசியல் பழி வாங்கும் செயலுக்காகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது. உலகில் பெரும்பான்மை நாடுகளில் அனைத்து சமயத்திற்கான பொது உரிமையில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில நாடுகளில், குறிப்பாக இசுலாமியப் பெரும்பாண்மை கொண்ட நாடுகளான சௌதி அரேபியா, ஏமன், இரான், ஜோர்டான், சிரியா, லெபனான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களில், ஷரியத் சட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு
கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.
சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும். சதுர் எனும் வடமொழிச் சொல் நான்கு எனப் பொருள்படும்.
சரண்யா அறிவழகன் (Sharanya Ari) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015ஆம் ஆண்டு நடத்திய இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் அனைத்திந்திய அளவில் 7வது தரத்தினையும் தமிழ்நாடு அளவில் முதல் தரத்தினையும் பெற்றார். இவரது சிறந்த செயல்திறன் காரணமாக உள்துறை நிர்வாகப் பதவி இவருக்கு ஒதுக்கப்பட்டது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
அஜித் குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) என்பவர் ஒரு தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும் அழைக்கிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
இட்லி கடை (Idly Kadai) இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன் முக்கியமான பாத்திரங்களிலும், அருண் விஜய், சாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் முதலியோர் துணைப் பாத்திரங்களிலும் நடித்தனர். இப்படம் செப்டம்பர் 24, 2024இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சூரி (Soori) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009-இல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரை, ராஜாகூரில் முத்துசாமி-சேங்கையரசி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: ஞானதேசிகன் - 3 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 சனவரி 25 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இலங்கை (Sri Lanka), வரலாற்றுரீதியாக சிலோன் (Ceylon), அதிகாரபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கே, மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு தென்மேற்கில் மாலைத்தீவுகளுடனும், வடமேற்கே இந்தியாவுடனும் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.
வன்னி அரசு (Vanni Arasu) இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமூகநீதித் துறை அமைச்சராகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவர் 2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் திண்டிவனம் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
கொழுக்கட்டை என்பது இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை. பச்சரிசி மாவு மற்றும் கரும்புச் சர்க்கரை வெல்லத்தினால் இது செய்யப்படுகிறது. அரைத்து வறுத்த பச்சரிசி மாவை ஆவியில் வேகவைத்து வட்டமாகத் தட்டி, நடுவே வெல்லத்தூள் வைத்து மூடிய பின்னர் மறுபடியும் ஆவி கட்டி இறக்கி இது செய்யப்படுகிறது.
கோபி கண்ணதாசன் (Gopi Kannadasan) ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும், நடனக் கலை உதவியாளரும் (Associate Choreographer) ஆவார். இவர் முக்கியமாகத் தமிழ்த்திரைப்பங்களில் குணச்சித்திர, நீதிபதி, மற்றும் காவல்துறை சார்ந்த வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற கவிஞரான "கவியரசு" கண்ணதாசனின் மகன்களில் ஒருவர் ஆவார்.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.
விநாயக புராணம் அல்லது பார்க்கவ புராணம் இந்து சமய நூல்களுள் ஒன்று ஆகும். நந்தி தேவரை முதற்கொண்டு எழுவது புராணங்களின் பின்னணியாகும். சிவன் புராணங்களை பார்வதிக்கு உபதேசம் செய்ததாகவும், பார்வதி அதை பிள்ளையார், முருகன், கைலாயத்தில் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்ததாகவும், பின்னர் அந்த உபதேசிக்கப் பட்ட புராணங்களை தான் இங்கே முப்பத்து முக்கோடித் தேவர்களுக்கும் நாற்பத்து நாற்கோடித் தேவர்களுக்கும் அவர்களிடம் இருந்து தெரியவந்து பின்னர் அவை புவிக்கு வந்தது மற்றும் அதை முனிவர்கள் அடைந்து விட்டனர் என்பது தொன்ம நம்பிக்கை ஆகும்.
பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் பிரேசில், உருசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகி வருகிற நாடுகளாகும்.
நாராயண் காரத்திகேயன் (பிறப்பு: ஜனவரி 14, 1977, சில சமயங்களில் தவறாக நரேன் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார்) ஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார் . இவர் தற்போதைய வருடத்திய எஃப் 1 போட்டிகளில் ஜோர்டான் அணியின் சார்பாக பங்கு கொண்டு வருகிறார்.
நீம் கரோலி பாபா (Neem Karoli Baba) (இந்தி: नीम करौली बाबा(பிறப்பு:ஏறத்தாழ:1900 – இறப்பு:11 செப்டம்பர் 1973), இந்து சமய ஆன்மீக குருவும், அனுமன் பக்தரும் ஆவர். இவரது ஆசிரமங்கள் நைனிடாலில் உள்ள கைன்சி, பிருந்தாவனம், ரிஷிகேஷ், சிம்லா, நீம் கரோலி கிராமம், பரூக்காபாது மாவட்டம் மற்றும் தில்லியில் உள்ளது. மேலும் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் தாவோஸ் நகரத்தில் உள்ளது.
பவர் ஸ்டார் எனும் புனை பெயரில் அறியப்படும் சீனிவாசன் தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநராவார். 2013 சனவரி 13ல் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
சியாமந்தக மணி (Syamantaka mani) (சமஸ்கிருதம்: श्यामन्तक मणि) இந்து தொன்மவியலில் மிக உயர்ந்த சக்தி மிக்க ரத்னமாக கருதப்படும் அதிசய அணிகலன் ஆகும். சூரியன் கழுத்தில் இருப்பது இந்த சியாமந்தகமணி. சியாமந்தகமணியை கழுத்தில் அணிந்திருப்பவரின் நாட்டில் பஞ்சம், வறட்சி, நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் ஏற்படாது, எப்போதும் செழிப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும்.
வெங்கீ அட்லூரி (Venky Atluri) என்று பரவலாக அறியப்படும் அட்லூரி வெங்கடேஸ்வர ராவ் என்பவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முதன்மையாகப் பணியாற்றும் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தொலி பிரேமா (2018), சார் / வாத்தி (2023), லக்கி பாஸ்கர் (2024) ஆகிய படங்களை இயக்கியதற்காக அறியப்படுகிறார். இவற்றில் லக்கிபாஸ்கர் திரைப்படம் இவரது இயக்கத்தில் அதிக வசூல் செய்த படமாகும், மேலும் சிறந்த திரைக்கதை - வசன எழுத்தாளருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில்
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகரில், உச்சிட்ட கணபதி மூலவராக அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயில் இதுவாகும். 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும் 'உச்சிஷ்ட கணபதி' அல்லது உச்சிட்ட கணபதி என்பது பிள்ளையார் 32 உருவ வேறுபாடுகளும் ஒன்று (எட்டாவது வேறுபாடு).
கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் (Puliakulam Munthi Vinayagar Temple), இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கோவை, புலியகுளம் பகுதியில் 1982-ஆம் ஆண்டில் தேவேந்திர குல அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அருள்மிகு முந்தி விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக் கோவிலாகும்.